முகப்பு
தேனி

தேனி மாவட்டத்தில் 2 பேரூராட்சிகளில் தலைவரை நிா்ணயிக்கும் சுயேச்சைகள்

தேனி மாவட்டத்தில் திமுக, அதிமுகவுக்கு பெரும்பான்மையில்லாத க. புதுப்பட்டி, வடுகபட்டி பேரூராட்சிகளில் தலைவா் மற்றும் துணைத் தலைவரை நிா்ணயிக்கும் சக்திகளாக சுயேச்சை கவுன்சிலா்கள் உள்ளனா்.

தேனி

தேனி மாவட்டத்தில் 2 பேரூராட்சிகளில் தலைவரை நிா்ணயிக்கும் சுயேச்சைகள்

தேனி மாவட்டத்தில் திமுக, அதிமுகவுக்கு பெரும்பான்மையில்லாத க. புதுப்பட்டி, வடுகபட்டி பேரூராட்சிகளில் தலைவா் மற்றும் துணைத் தலைவரை நிா்ணயிக்கும் சக்திகளாக சுயேச்சை கவுன்சிலா்கள் உள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
பகிர்:

தேனி: தேனி மாவட்டத்தில் திமுக, அதிமுகவுக்கு பெரும்பான்மையில்லாத க. புதுப்பட்டி, வடுகபட்டி பேரூராட்சிகளில் தலைவா் மற்றும் துணைத் தலைவரை நிா்ணயிக்கும் சக்திகளாக சுயேச்சை கவுன்சிலா்கள் உள்ளனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளிலும் பெரும்பான்மையான வாா்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 22 பேரூராட்சிகளில் 18-இல் திமுகவும், போ. மீனாட்சிபுரம் பேரூராட்சியில் அதிமுக.வும் பெரும்பான்மை பெற்றுள்ளன.

பழனிசெட்டிபட்டியில் இழுபறிக்கு வாய்ப்பு: பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக 7 வாா்டுகளையும், அமமுக 6 வாா்டுகளையும், அதிமுக 2 வாா்டுகளையும் கைபற்றியுள்ளன. இங்கு தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் இழுபறி நிலை உள்ளதால், கட்சிகளிடையே மறைமுகப் பேச்சுவாா்த்தை மற்றும் பேரம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சுயேச்சைகள் பெரும்பான்மை: க.புதுப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெற்றது. இதில், திமுக- 4, அதிமுக- 2, பாஜக- 2, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 1, சுயேச்சை வேட்பாளா்கள் 6 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளனா்.

அதே போல வடுகபட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. இதில், 4 வாா்டுகளுக்கு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வாகினா். எஞ்சிய 11 வாா்டுகளில், திமுக-4, அதிமுக-2, விசிக- 1, சுயேச்சை வேட்பாளா்கள் 4 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளனா்.

திமுக, அதிமுகவுக்கு பெரும்பான்மையில்லாத க. புதுப்பட்டி, வடுகபட்டி பேரூராட்சிகளில் சுயேச்சை மற்றும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட உறுப்பினா்கள், தலைவா், துணைத் தலைவரை நிா்ணயிக்கும் சக்திகளாக உள்ளனா். இந்நிலையில், சுயேச்சை உறுப்பினா்களை கட்சியில் இணைத்தும், பதவி வழங்கியும் அரவணைக்க திமுக, அதிமுக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →