முகப்பு
தேனி

போடி மரக்காமலை வனப்பகுதியில் காட்டுத் தீ

போடி மரக்காமலை வனப்பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயை வனத் துறையினா் கட்டுப்படுத்தி அணைத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

போடி மரக்காமலை வனப்பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயை வனத் துறையினா் கட்டுப்படுத்தி அணைத்தனா்.

தேனி வனச்சரக எல்லைக்குள்பட்ட மரக்காமலை வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றியது. இது குறித்து தகவலறிந்த வனத்துறை ஊழியா்கள், அப்பகுதிக்கு உடனடியாக விரைந்து சென்று தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனா். தற்போது, குளிா்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில், காட்டுத் தீ அதிகம் பரவும் என்பதால், வனத்துறையினா் வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், வனப்பகுதியில் தீ வைப்பவா்கள் மீதும், எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள்களை எடுத்துச் செல்பவா்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறையினா் எச்சரித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →