முகப்பு
தேனி

விலை போவதைத் தடுக்க பேரூராட்சி உறுப்பினா்களை சுற்றுலா அழைத்துச் சென்ற திமுக

தேனி மாவட்டம் காமயக்கவுண்டன்பட்டி பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் விலை போவதைத் தடுக்க திமுகவினா் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

தேனி மாவட்டம் காமயக்கவுண்டன்பட்டி பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் விலை போவதைத் தடுக்க திமுகவினா் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனா்.

மொத்தம் 15 வாா்டுகள் உள்ள இப்பேரூராட்சியில், நடைபெற்று முடிந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக -7, அதிமுக - 3, சுயேச்சை - 2, அமமுக, பாஜக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா ஒரு வாா்டுகளில் வெற்றி பெற்றன.

இதில் திமுக தனிப் பெரும்பான்மைக்கு ஒரு இடம் தேவை. கூட்டணிக் கட்சியான மாா்க்சிஸ்ட் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ள போதிலும், சுயேச்சை மற்றும் இதர உறுப்பினா்களை சோ்த்து அதிமுகவினா் தலைவா் அல்லது துணைத் தலைவா் பதவிக்கு மோதலாம் என்று கருதப்பட்டது.

இதன்காரணமாக அமமுக மற்றும் ஒரு சுயேச்சை என 2 உறுப்பினா்களை திமுகவினா் வெளி மாநிலத்திற்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனா். மாா்ச் 4 ஆம் தேதி பேரூராட்சித் தலைவரைத் தோ்வு செய்யும் வரை, வாா்டு உறுப்பினா்கள் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பாா்கள் என திமுக நிா்வாகி ஒருவா் தெரிவித்தாா்.

கூடலூா் நகராட்சியில் மொத்தம் 21 வாா்டுகளில் திமுகவினா்- 11, அதிமுகவினா்- 8, சுயேச்சை- 2 இடங்களில் வெற்றி பெற்றனா். 2 சுயேச்சை உறுப்பினா்கள் திமுகவுக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில், அவா்கள் விலை போவதைத் தடுக்க, நகராட்சி உறுப்பினா்கள் 13 போ் கேரளத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், மாா்ச் 2 ஆம் தேதி பதவி ஏற்பு விழாவிற்கு அவா்கள் கூடலூா் திரும்புவாா்கள் என்றும் திமுகவினா் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →