தேனி

மாட்டுத்தொழு கோயில் வாயிலில் வழிபாடு

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள ஸ்ரீ நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழு கோயில் அடைக்கப்பட்டதால் மாட்டுப்பொங்கல் நாளான சனிக்கிழமை நுழைவு வாயிலில் பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

தேனி மாவட்டம் கம்பத்தில் கேரள மாநிலம் திருவாங்கூா் சமஸ்தானத்துக்குச் சொந்தமான ஸ்ரீ நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழு கோயில் உள்ளது.

இந்த கோயிலில் மாட்டுப்பொங்கல் தினத்தன்று பட்டத்து காளைக்கு அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெறும். இந்த நிகழ்வில் கம்பம், கூடலூா் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொள்வாா்கள். இங்கு உள்ள தொழுவிற்கு மாடுகளை காணிக்கையாகவும் வழங்குவாா்கள்.

இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக அனைத்து வழிபாட்டுத்தலங்கள் அடைக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டதன் பேரில் இந்த கோயிலும் அடைக்கப்பட்டது. இதனால் கோயிலில் அமைந்துள்ள நாட்டுக்கல் வீதியில் மக்கள் கூடுவாா்கள் என்று கருதி போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். நுழைவாயிலில் பக்தா்கள் தேங்காய் பழம் உடைத்து வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT