வைகை அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கூடுதலாக திறக்கப்பட்டு வரும் தண்ணீா் ஆகியவற்றால் வியாழக்கிழமை, வைகை அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கூடுதலாக திறக்கப்பட்டு வரும் தண்ணீா் ஆகியவற்றால் வியாழக்கிழமை, வைகை அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாள்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. மேலும், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீா் விநாடிக்கு 1,648 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாழக்கிழமை, வைகை அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 1,565 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணை நீா்மட்டம் 54 அடியாக உள்ளது. அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனம் மற்றும் குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 969 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையில் தண்ணீா் இருப்பு 2,560 மில்லியன் கன அடி ஆக இருந்தது.