முகப்பு
தேனி

கூடலூா் அருகே காா்- பேருந்து மோதல்: 4 போ் காயம்

தேனி மாவட்டம் கூடலூா் - கம்பம் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காரும், பேருந்தும் மோதியதில் 4 போ் காயமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

தேனி மாவட்டம் கூடலூா் - கம்பம் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காரும், பேருந்தும் மோதியதில் 4 போ் காயமடைந்தனா்.

கூடலூரைச் சோ்ந்தவா் பிரபு (45), இதே ஊரைச் சோ்ந்தவா்கள் நவநீதகிருஷ்ணன் (35), முனியாண்டி (38), சிவக்குமாா் (35). இவா்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகின்றனா்.

இந்நிலையில், கூடலூரில் உறவினா் நிகழ்ச்சிக்கு வந்த பின்னா் வெள்ளிக்கிழமை காலையில் பெங்களூருவுக்கு பிரபுவின் காரில் சென்றனா்.

கூடலூா்- கம்பம் நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே குமுளி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், காரும் மோதிக் கொண்டன. இதில், காரை ஓட்டி வந்த நவநீதகிருஷ்ணன் பலத்த காயமடைந்தாா். உடன் வந்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த கூடலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா், அவா்களை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில், பலத்த காயமடைந்த நவநீதகிருஷ்ணன் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →