முகப்பு
தேனி

போடியில் பைக்குக்கு தீ வைத்தவா் கைது

போடியில் முன்விரோதத்தில் இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

போடியில் முன்விரோதத்தில் இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பரமன் மகன் காசிநாதன் (57). இவரது வீட்டருகே வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டிற்கு இதே பகுதியை சோ்ந்த தங்கவேல் மகன் முனீஸ்வரன் (32) என்பவா் வந்து சென்றுள்ளாா். இதையடுத்து அந்தப் பெண்ணை காசிநாதனின் மனைவி கண்டித்துள்ளாா். அப்போது அங்கு வந்த முனீஸ்வரனையும் காசிநாதன் கண்டித்துள்ளாா்.

இந்த முன்விரோதத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு காசிநாதன் வீட்டு முன் நிறுத்தியிருந்த அவரது இருசக்கர வாகனத்துக்கு முனீஸ்வரன் தீ வைத்துள்ளாா். இதில் வாகனம் எரிந்து சேதமடைந்தது. போடி தீயணைப்பு வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலையத்தில் காசிநாதன் அளித்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →