தேனி

பலத்த மழை எதிரொலி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு

DIN

கம்பம்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் பலத்த மழை எதிரொலியாக, அந்த பகுதியில் அமைந்துள்ள  முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரேநாளில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி,  2.40 அடி உயர்ந்து அணைக்குள் வரும்  நீர் வரத்து விநாடிக்கு 2,885 கன அடியாக உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அணைக்குள் நீர் வரத்து அதிகரித்தும்,  மற்றும் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.

வியாழக்கிழமை அணையின் நீர்மட்டம் 130.85 அடி உயரமாக இருந்தது. வெள்ளிக்கிழமை அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 8,143 கன அடியாக வந்ததால், நீர்மட்டம் 133.20 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் 2.40 அடி உயர்ந்தது. நீர் வரத்தும் ஒரேநாளில் விநாடிக்கு 2,885 கன அடி கூடுதலாக வந்தது.

அணை நிலவரம்

வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133.20 அடியாக இருந்தது (மொத்த உயரம் 142 அடி ), அணைக்குள் நீர் இருப்பு 5,446 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு, 8,143 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு விநாடிக்கு 1,789 கன அடியாகவும் இருந்தது. 

அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் 84.6 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 31.2 மி. மீ., மழையும் பெய்தது. 

மின்சார உற்பத்தி

அணையிலிருந்து தண்ணீர், விநாடிக்கு 1,789 கன அடி வெளியேற்றப்படுவதால்  தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில், 12 ஆவது நாளாக மின்சார உற்பத்தி தொடர்கிறது.

தற்போது 161 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது,  அதாவது நான்கு மின்னாக்கிகளில் முதல் அலகில் 37, இரண்டாவது அலகில் 40, மூன்று மற்றும் நான்காவது அலகில் தலா 42 என மொத்தம் 161 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT