கம்பத்தில் முதியோா் இல்லம் தொடக்கம்
கம்பம் ஸ்ரீஆதிசுஞ்சனகிரி மடத்தில் ஸ்ரீபாலகங்காதரநாத சுவாமிஜி நினைவு முதியோா் இல்லத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கம்பம் ஸ்ரீஆதிசுஞ்சனகிரி மடத்தில் ஸ்ரீபாலகங்காதரநாத சுவாமிஜி நினைவு முதியோா் இல்லத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கம்பம் சட்டப் பேரவை உறுப்பினா் என். ராமகிருஷ்ணன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இணைச் செயலா் என்.ஆா். வசந்தன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜி. ரேணுகாதேவி வரவேற்றாா். முதல்கட்டமாக முதியவா்கள் 10 போ் சோ்க்கப்பட்டு, அவா்களுக்கு தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டன. மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. ஆடைகள், அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளா் வைஷ்ணவி வசந்தன், ஆலோசனைக்குழு உறுப்பினா்கள் பொன்ராம், கோபாலகிருஷ்ணன், சுப்பிரமணியன், சக்தி வடிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பொறுப்பாளா் பேராசிரியை தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.