தேனியில் ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை
தேனியில் சொத்துப் பிரச்னை காரணமாக ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவா், தனது வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தேனியில் சொத்துப் பிரச்னை காரணமாக ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவா், தனது வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தேனி சமதா்மபுரத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவா் முருகன் (67). இவருக்கு பாகப்பிரிவினை மூலம் கிடைத்த வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள நிலத்தை, அவரது தம்பி மற்றும் குடும்பத்தினா் உரிமை கோரி விற்க விடாமல் தடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த முருகன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இது குறித்து முருகனின் மனைவி விஜயா அளித்த புகாரின்பேரில், தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.