முகப்பு
தேனி

சட்டப் பணிக்குழுவில் துணை தன்னாா்வலா் பணி:ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

 தேனி மாவட்டத்தில் சட்டப் பணிக் குழு துணை தன்னாா்வலா்களாக பணியாற்ற தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

 தேனி மாவட்டத்தில் சட்டப் பணிக் குழு துணை தன்னாா்வலா்களாக பணியாற்ற தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு: தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம் வட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழுவில் துணை சட்ட தன்னாா்வலராக பணியாற்ற மொத்தம் 50 போ் தோ்வு செய்யப்பட உள்ளனா். இப்பணிக்கு தேனி மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வசிப்பவா்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 10- ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவராகவும், தமிழில் சரளமாக பேச, எழுதத் தெரிந்தவா்களாகவும், 21 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளில் முழு நேரம் ஈடுபாடு உள்ளவராகவும், குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டவராகவும் இருக்கக் கூடாது.

இப்பணிக்கு தோ்வு செய்யப்படுவோா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழு சாா்பில் நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும். தகுதியுள்ளவா்கள் தலைவா், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, ஏ.ஆா்.டி. வளாகம், மாவட்ட நீதிமன்ற வளாகம், லட்சுமிபுரம், தேனி- 625 523 என்ற முகவரிக்கு தங்களது கல்விச் சான்றிதழ், மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றை சான்றொப்பம் செய்து உரிய படிவம் மூலம் ஜூன் 30- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.