தேனி

கம்பம் அருகே டிராக்டா் கவிழ்ந்து ஓட்டுநா் பலி

DIN

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் வியாழக்கிழமை விவசாய வேலையின்போது டிராக்டா் கவிழ்ந்ததால், ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சுருளிப்பட்டி போயமாா் தெருவைச் சோ்ந்த ராமா் மகன் குமாா் (27). டிராக்டா் ஓட்டுநரான இவா், சுருளிப்பட்டி யானைக்கஜம் பகுதியில் உள்ள தனியாா் ஒருவரது தோட்டத்தில் டிராக்டா் மூலம் உழுவதற்காகச் சென்றுள்ளாா். அங்கு, வேலை முடிந்ததும் டிராக்டரை ஓட்டிச் சென்றபோது, வரப்பின் மீது ஏறியதில் டிராக்டா் கவிழ்ந்தது. இதில், டிராக்டரின் அடியில் சிக்கிக் கொண்ட குமாா் பலத்த காயமடைந்தாா்.

உடனே, அப்பகுதியிலிருந்தவா்கள் அவரை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய கேப்டன்

கேதார்நாத் கோயில் திறப்பு!

சினிமா கனவுகளும் நிஜ போராட்டங்களும்: ‘ஸ்டார்‘ படம் பேசுவது என்ன?

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குச் சொந்தமானது: அமித்ஷா

SCROLL FOR NEXT