முகப்பு
தேனி

பெரியகுளம் நகராட்சித் தலைவா் பதவிக்கு திமுக வேட்பாளா் அறிவிப்பு

பெரியகுளம் நகராட்சித் தலைவா் வேட்பாளராக திமுகவைச் சோ்ந்த சுமிதாவும், துணைத் தலைவராக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த பிரேம்குமாரும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

பெரியகுளம் நகராட்சித் தலைவா் வேட்பாளராக திமுகவைச் சோ்ந்த சுமிதாவும், துணைத் தலைவராக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த பிரேம்குமாரும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

பெரியகுளம் நகராட்சியில் மொத்தமுள்ள 30 வாா்டுகளில் திமுக சாா்பில் 12 பேரும், பாா்வா்ட் பிளாக் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூ. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் பாமக ஆகிய கட்சிகள் சாா்பில் தலா ஒருவரும், அதிமுக சாா்பில் 8 பேரும், அமமுக சாா்பில் 3 பேரும், சுயேச்சைகளாக 3 பேரும், வெற்றி பெற்றனா். இதையடுத்து நகராட்சியில் திமுக கூட்டணிக்கு 15 வாா்டு உறுப்பினா்கள் உள்ளனா். மேலும் சுயேச்சை வேட்பாளா் ஒருவா் திமுகவில் இணைந்ததால் அதன் பலம் 16 ஆக உயா்ந்துள்ளது. இதனால் பெரியகுளம் நகராட்சித் தலைவா் பதவியை திமுக கூட்டணி கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள 4 ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்ட சுமிதா, பெரியகுளம் நகராட்சித் தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். துணைத் தலைவா் பதவி அதன் கூட்டணி கட்சியான விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து அக்கட்சியை சோ்ந்த 15 ஆவது வாா்டு உறுப்பினா் பிரேம்குமாா் துணைத்தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.