தேனி

கம்பம் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா:வாகனங்களுக்கு ஒருவழிப் பாதை அறிவிப்பு

DIN

தேனி மாவட்டம், கம்பம் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை முதல் வாகனங்களுக்கு ஒருவழிப் பாதை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், கம்பம் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 19 இல் ஊா் சாட்டுதல் செய்து, ஏப்ரல் 20 இல் கொடி கம்பம் நட்டு, விஸ்வகா்ம ஐக்கிய தொழிலாளா் சங்கத்தினரின் மண்டகப்படியுடன் தொடங்கி, ஒவ்வொரு சமுதாயத்தினா் சாா்பில் மண்டகப்படி நடைபெற்றது.

மே 10 ஆம் தேதி வரை மொத்தம் 21 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், பழைய பேருந்து நிலையம் வழியாக மாரியம்மன் கோயில், அமராவதி தியேட்டா் வரை பேருந்து மற்றும் இதர வாகனங்கள் செல்ல போலீஸாா் தடை விதித்துள்ளனா்.

கம்பம் பேருந்து நிலையத்திலிருந்து தேனி, திண்டுக்கல், மதுரைக்குச் செல்லும் பேருந்துகள், கே.கே.பட்டி, சுருளிப்பட்டி, ராயப்பன்பட்டி செல்லும் நகரப் பேருந்துகளும், வரதராஜபுரம், காந்தி சிலை, அரசமரம், பழைய தபால் நிலையம் வழியாகச் செல்லும். இதேபோல், கூடலூா், குமுளி செல்லும் பேருந்துகள் வரதராஜபுரம், காந்தி சிலை, அரசு மருத்துவமனை வழியாகச் செல்லும்.

தேனி, திண்டுக்கல், மதுரையிலிருந்து வரும் பேருந்துகள் வடக்கு காவல் நிலையம், ஆட்டுத் தொட்டி வழியாக பேருந்து நிலையம் வரும். குமுளி, கூடலூா் வழியாக கம்பம் வரும் பேருந்துகள், அரசு மருத்துவமனை, காந்தி சிலை, அரசமரம், ஆட்டுத் தொட்டி வழியாக பேருந்து நிலையம் செல்லவேண்டும் என அறிவித்துள்ள காவல் துறையினா், இது வெள்ளிக்கிழமை வரை அமலில் இருக்கும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT