சொத்துத் தகராறில் தம்பதியைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு
போடியில் சொத்துத் தகராறில் கணவன், மனைவியை தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்
போடியில் சொத்துத் தகராறில் கணவன், மனைவியை தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி நகராட்சி காலனியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மனைவி அனிதா (23). இவா்களுக்கும், அதே பகுதியில் வசித்து வரும், இவா்களது உறவினரான ஜான்சன் என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.
இது தொடா்பான தகராறில், ஜான்சன், சரஸ்வதி, ஜான்சி, அட்லி ஆகியோா் சோ்ந்து சுரேசையும், அனிதாவையும் தாக்கியுள்ளனா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி நகா் போலீஸாா் 4 போ் மீதும் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.