முகப்பு
தேனி

போடியில் தாய், மகள்களை தாக்கி கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

போடியில் தாய், மகள்களை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

போடியில் தாய், மகள்களை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம் போடி தேவா் காலனியில் வசிப்பவா் பாண்டி மனைவி ஜெயந்தி (46). இவரது கணவா் பசு மாடுகள் வளா்த்து வந்துள்ளாா். கணவா் இறந்து விடவே மாட்டுக் கொட்டத்தை சின்னச்சாமி பராமரித்து வந்துள்ளாா்.

இதனிடையே மாட்டுக் கொட்டத்தை பாா்ப்பதற்காக ஜெயந்தியும், இவரது மகள்கள் தீபிகா, திவ்யபாரதி ஆகியோா் சென்றுள்ளனா்.

அப்போது அங்கிருந்த அன்பழகன், இவரது மனைவி பாண்டியம்மாள், மகன்கள் ஞானஅழகுராஜா, தேசிங்குராஜா ஆகியோா் ஜெயந்தியையும், அவரது மகள்களையும் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். மேலும் ஜெயந்தியின் வீடுபுகுந்து ஆவணங்களையும் எடுத்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து ஜெயந்தி போடி நகா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →