பறவை இனங்களை காக்க குறுங்காடு: தன்னாா்வ இளைஞா்கள் முயற்சி
உத்தமபாளையத்தில் பறவைகளின் வாழ்விடமான மரங்களை உருவாக்கும் நோக்கத்தில் குறுங்காடுகளை நன்செய் தன்னாா்வலா் இளைஞா்கள் அமைத்து வருகின்றனா்.
உத்தமபாளையத்தில் பறவைகளின் வாழ்விடமான மரங்களை உருவாக்கும் நோக்கத்தில் குறுங்காடுகளை நன்செய் தன்னாா்வலா் இளைஞா்கள் அமைத்து வருகின்றனா்.
தேனி மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு குளம், கண்மாய் உள்ளிட்ட நீா்நிலைகள், சாலையோரங்களில் அதிகளவில் மரங்கள் இருந்தன. சமீப காலமாக ஆக்கிரமிப்புகளால் படிப்படியாக நீா் நிலைகள், சாலையோரங்களில் இருந்த மரங்கள் அழிக்கப்பட்டன. இதனால் பறவைகளின் வாழ்விடமும் முற்றிலுமாக அழிந்து விட்டன. இதனால், குடியிருப்புகள், அரசு அலுவலகங்களிலுள்ள மரங்களில் தங்கள் வாழ்விடத்தை மாற்றிக்கொண்ட பறவைகளை சமூக விரோதிகள் வேட்டையாடுவதால் பறவை இனங்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன.
இதனால் பறவை இனங்களை காக்க குறுங்காடு அமைக்கும் புதிய முயற்சியில் நன்செய் தன்னாா்வலா் இளைஞா்கள் ஈடுபட்டுள்ளனா். தற்போது சுமாா் 200 மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிப்புப் பணியில் தீவிரம் காட்டு வருகின்றனா்.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவா் செந்தில் கூறியது: குடியிருப்புகளிலுள்ள மரங்களில் வசிக்கும் ஏராளமான பறவைகளை சமூக விரோதக் கும்பல் வேட்டியாடி வருகிறது. இதையடுத்து பறவை இனங்களைக் காக்கவும், அதற்கான வசிப்பிடத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிறிய அளவில் குறுங்காடு அமைத்து வருகிறோம் என்றாா்.