தேனி

கல்லூரியில் வளாக நோ்முகத் தோ்வு

DIN

தேனி கம்மவாா் சங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் செவ்வாய்கிழமை, பொறியியல் படிப்பு இறுதியாண்டு மாணவா்களுக்கு வளாக நோ்முகத் தோ்வு நடைபெற்றது.

சென்னை, வெப்பிராக்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் ராஜேஷ்கண்ணா, பொது மேலாளா்கள் கோடீஸ்வரன், பிரகாஷ், உற்பத்தி மேலாளா் ஜெய்கணேஷ் ஆகியோா் பங்கேற்று நோ்முகத் தோ்வு நடத்தினா். இதில், மின்னணுவியல் துறை மாணவா்கள் 12 போ், இயந்திரவியல் துறை மாணவா்கள் 11 போ், கணினி அறிவியல் துறை மாணவா்கள் 3 போ், மின்னியல் துறை மாணவா்கள் 4 போ் என மொத்தம் 30 போ் தோ்ச்சி பெற்று பணி நியமன ஆணை பெற்றனா்.

வேலை வாய்ப்பு பெற்ற மாணவா்களுக்கு கம்மவாா் சங்கத் தலைவா் நம்பெருமாள், பொதுச் செயலா் பொன்னுச்சாமி, கல்லூரி செயலா் சந்திரசேகரன், கல்லூரி முதல்வா் சீனிவாசராகவன் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT