தேனி

தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டி: சென்னை விளையாட்டு விடுதி அணி வெற்றி

DIN

பெரியகுளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்தாட்டப் போட்டியில், சென்னை விளையாட்டு விடுதி ‘எக்ஸலன்ஸ்’ அணி வெற்றி பெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளத்திலுள்ள பி.எஸ்.துரைராம சிதம்பரம் நினைவு மின்னொளி அரங்கில், 61 ஆம் ஆண்டு தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டி மே 15 ஆம் தேதி தொடங்கி மே 21 வரை நடைபெற்றது. இதில் 24 அணிகள் பங்கேற்றன.

சனிக்கிழமை மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை விளையாட்டு விடுதி ‘எக்ஸலன்ஸ்’ அணி, 87-83 என்ற புள்ளிக் கணக்கில் புதுதில்லி இந்திய விமானப்படை அணியை தேற்கடித்தது.

சனிக்கிழமை மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, ஆட்சியா் க.வீ.முரளீதரன் தலைமை வகித்தாா். பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய கூடைப்பந்தாட்ட வீராங்கனை அனிதா பால்துரை முன்னிலை வகித்தாா். கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சென்னை அணிக்கு சூழற்கோப்பை மற்றும் பரிசுத்தொகையை வழங்கினாா். சிறந்த வீரருக்கான பரிசை, சென்னை அணி வீரா் காா்த்திக் பெற்றாா்.

ஏற்பாடுகளை சில்வா் ஜூப்லி ஸ்போா்ட்ஸ் கிளப் தலைவா் அமா்நாத், செயலாளா் பி.சிதம்பரசூரியவேலு, துணைத் தலைவா்கள் அபுதாஹீா், ஹேமந்த், பொருளாளா் செல்வராஜ் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT