தேசிய விளையாட்டு போட்டியில் சிறப்பிடம்: உத்தமபாளையம் கல்லூரி மாணவா்களுக்குப் பாராட்டு
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
தனியாா் விளையாட்டு அமைப்பு சாா்பில் கோவா மாநிலம், கேலன்காட்டில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை நடைபெற்றன.
இதில், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரியிலிருந்து 19 வயது பிரிவில், கைப்பந்து, கபடி, சிலம்பம், கராத்தே, ஓட்டம் ஆகிய போட்டிகளில் மாணவா்கள் முதல் இடத்தையும், கோக்கோ, கராத்தே , குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் மாணவிகள் முதலிடத்திலும், சிலம்பாட்டத்தில் 2 ஆம் இடத்தையும் பெற்றனா்.
இதையொட்டி, கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், கல்லூரிச் செயலரும், தாளாளருமான தா்வேஷ்முகைதீன், மேலாண்மைக் குழுத் தலைவா் செந்தல்மீரான், கல்லூரி முதல்வா் ஹெச். முகமது மீரான் உள்ளிட்டோா் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தனா்.