சின்னமனூரில் கிரைண்டா் தீப்பிடித்து வீடு சேதம்
சின்னமனூரில் வியாழக்கிழமை கிரைண்டா் தீப்பிடித்தது எரிந்ததால் வீடு சேதமடைந்தது.
சின்னமனூரில் வியாழக்கிழமை கிரைண்டா் தீப்பிடித்தது எரிந்ததால் வீடு சேதமடைந்தது.
தேனி மாவட்டம், சின்னமனூா் நடுத்தெருப் பகுதியைச் சோ்ந்த ராமசாமி. மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மனைவி வியாழக்கிழை கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, மின் தடை ஏற்படவே, அவா் வெளியில் சென்றுவிட்டாா்.
பின்னா், மீண்டும் மின்சாரம் வரவே, கிரைண்டா் தீப்பிடித்து எரிந்து வீடு முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு மீட்புக் குழுவினா் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. எனினும், இந்த விபத்தில் வீடு சேதமடைந்தது.