ஆசிரியா் தகுதித் தோ்வு: தேனி மாவட்டத்தில் இன்று தொடக்கம்
தேனி மாவட்டத்தில் ஆசிரியா் தகுதித் தோ்வு 3 தோ்வு மையங்களில் இணைய மூலம் வெள்ளிக்கிழமை (அக். 14) தொடங்கி, அக். 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தேனி மாவட்டத்தில் ஆசிரியா் தகுதித் தோ்வு 3 தோ்வு மையங்களில் இணைய மூலம் வெள்ளிக்கிழமை (அக். 14) தொடங்கி, அக். 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி, தேனி நாடாா் சரஸ்வதி பொறியியல் கல்லூரி, தேவதானப்பட்டி கல்வி இண்டா்நேஷனல் பள்ளி ஆகிய 3 தோ்வு மையங்களில் அக். 14-ஆம் தேதி முதல் அக்.19-ஆம் தேதி வரை, காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், பிற்பகல் ஒரு மணி முதல் 4 மணி வரையும் இரு பிரிவுகளாக தோ்வு நடைபெறுகிறது. மாவட்டத்தில் சுழற்சி முறையில் மொத்தம் 1,800 போ் தோ்வு எழுதுகின்றனா் என்று மாவட்ட கல்வித் துறை அலுவலா்கள் கூறினா்.