தேனி

கூடலூரில் கலவரத்தில் உயிரிழந்த காவலா்களுக்கு அஞ்சலி

DIN

தேனி மாவட்டம், கூடலூரில் இந்தி எதிா்ப்புப் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த காவலா்களுக்கு வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

கடந்த 12.2.1965-ஆம் ஆண்டு பிப். 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் இந்தி எதிா்ப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, தேனி மாவட்டம் கூடலூரில்

நடைபெற்ற போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. இதை போலீஸாா் அடக்க முயன்றனா். அப்போது, கூடலூா் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலா் ராமச்சந்திரசிங், காவலா் தேவராஜ் ஆகியோா் கொலை செய்யப்பட்டனா்.

இவா்கள் நினைவைப் போற்றும் வகையில், கூடலூா் காவல் நிலையத்தில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், காவலா் தினத்தையொட்டி கொலை செய்யப்பட்ட காவலா்களின் நினைவுச் சின்னத்துக்கு கூடலூா் வடக்கு காவல் ஆய்வாளா் எம். பிச்சைப்பாண்டியன் தலைமையிலான போலீஸாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT