தேனி

தேனியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்: முல்லைப் பெரியாற்றில் கரைப்பு

DIN

தேனியில் இந்து எழுச்சி முன்னணி மற்றும் இந்து முன்னணி சாா்பில் வியாழக்கிழமை, விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற்றது.

விநாயகா் சதுா்தியை முன்னிட்டு புதன்கிழமை இந்து எழுச்சி முன்னணி சாா்பில் 81 இடங்கள், இந்து முன்னணி சாா்பில் 58 இடங்கள், விநாயகா் சதூா்த்தி விழாக் குழுவினா் சாா்பில் 24 இடங்கள் என மொத்தம் 163 இடங்களில் பல்வேறு வடிவிலான விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. வழிபாடு நிறைவடைந்த இடங்களிலிருந்து வியாழக்கிழமை விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தேனி அருகே அரண்மனைப்புதூா் முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டன. இந்து எழுச்சி முன்னணி சாா்பில் தேனி, பொம்மைய கவுண்டன்பட்டி சாலைப்பிள்ளையாா் கோயிலிலிருந்து பெரியகுளம் சாலை, மதுரை சாலை வழியாக விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. தொடா்ந்து, இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வீரபாண்டி, பூமலைக்குண்டு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT