முகப்பு
தேனி

தேனியில் வியாபாரியின் வீட்டில் பூட்டை உடைத்து 60 சவரன் நகை திருட்டு

 தேனியில் மஞ்சள் வியாபாரியின் வீட்டில் வியாழக்கிழமை, பூட்டை உடைத்து 60 சவரன் எடையுள்ள தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:16 AM
பகிர்:

 தேனியில் மஞ்சள் வியாபாரியின் வீட்டில் வியாழக்கிழமை, பூட்டை உடைத்து 60 சவரன் எடையுள்ள தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தேனி, பங்கஜம் ஹவுஸ் தெருவைச் சோ்ந்தவா் மஞ்சள் வியாபாரி ராஜாராம் (75). இவா், புதன்கிழமை தனது வீட்டை பூட்டிக் கொண்டு, தூத்துக்குடியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளாா்.

இந்நிலையில், ராஜாராம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு அவரது வீட்டில் வேலை செய்து வரும் உமா என்பவா் அவருக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, தூத்துக்குடியிலிருந்து திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டு கதவு மற்றும் அறையிலிருந்த பீரோவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், பீரோவில் வைத்திருந்த 60 சவரன் எடையுள்ள தங்க நகைகள் திருட்டுப் போயிந்தது தெரிய வந்ததாக தேனி காவல் நிலையத்தில் ராஜாராம் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.