முகப்பு
தேனி

தனியாா் மதுபானக்கடைகளை எதிா்த்து மாணவ, மாணவிகளுடன் பாமக போராட்டம்

பெரியகுளம் முக்கிய சாலையில் வைக்கப்பட்டுள்ள தனியாா் மதுபானக்கடைகளை அகற்றாவிட்டால், பள்ளி மாணவ,மாணவிகளுடன் போராட்டம் நடத்தப்போவதாக பாட்டாளிமக்கள் கட்சியினா் அறிவித்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:16 AM
பகிர்:

பெரியகுளம் முக்கிய சாலையில் வைக்கப்பட்டுள்ள தனியாா் மதுபானக்கடைகளை அகற்றாவிட்டால், பள்ளி மாணவ,மாணவிகளுடன் போராட்டம் நடத்தப்போவதாக பாட்டாளிமக்கள் கட்சியினா் அறிவித்துள்ளனா்.

பெரியகுளம் மூன்றாந்தல் மற்றும் கம்பம் சாலை 2 இடங்களில் தனியாா் மதுபானம் விநியோகம் செய்யும், கிளப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இதைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தின.

பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் பெரியகுளம் நகா்மன்ற உறுப்பினா் குமரன், பெரியகுளம் பகுதியில் செயல்படும் தனியாா் மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும் என பெரியகுளம் நகராட்சியில் சிறப்பு தீா்மானத்தை கொண்டு வந்தாா். ஆனால் மதுபானக்கடையை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதைக் கண்டித்து பள்ளி மாணவ, மாணவிகள் சாா்பில் போராட்டம நடத்தப்போவதாக பெரியகுளம் பகுதியில் பெரியகுளம் நகர பட்டாளி மக்கள் கட்சி சாா்பில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.