முகப்பு
தேனி

தேனி மாவட்டத்தில் 7 வாக்குச் சாவடிகள் இடமாற்றம்

தேனி மாவட்டத்தில் கம்பம், காமயகவுண்டன்பட்டி ஆகிய இடங்களில் உள்ள 7 வாக்குச் சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று வியாழக்கிழமை, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:16 AM
பகிர்:

தேனி மாவட்டத்தில் கம்பம், காமயகவுண்டன்பட்டி ஆகிய இடங்களில் உள்ள 7 வாக்குச் சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று வியாழக்கிழமை, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்தாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்குச் சாவடி மறு சீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது:

மாவட்டத்திலுள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்குச் சாவடிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காமயகவுண்டன்பட்டியில் விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் 6 வாக்குச் சாவடிகள் இயங்கி வந்தது. தற்போது இப் பள்ளி செயல்படாததால், அதே ஊரில் அரசு கள்ளா் தொடக்கப் பள்ளிக்கு 3 வாக்குச் சாவடிகளும், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 3 வாக்குச் சாவடிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கம்பம் சட்டப் பேரவைக்கு உள்பட்ட கம்பம் நகராட்சி மெயின் தொடக்கப் பள்ளியில் இயங்கி வந்த ஒரு வாக்குச் சாவடி, அங்கு உதவி தொடக்க கல்வி அலுவலா் அலுவலகம் செயல்பட்டு வருவதால், அருகே உள்ள ஆங்கூா் ராவுத்தா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது.

போடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட முதுவாக்குடி மலை கிராம மக்கள், அங்கிருந்து 5 கி.மீ.,தூரமுள்ள செண்ட்ரல் ஸ்டேசன் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டியுள்ளதால், முதுவாக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாக வாக்குச் சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா் சிந்து, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) அன்பழகன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் ஜலால் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.