முகப்பு
தேனி

சின்னமனூரில் பூலாநந்தீஸ்வரா் ஆலயத்தில் பால ஸ்தாபன பூஜை

தேனி மாவட்டம் சின்னமனூா் அருள்மிகு பூலாநந்தீஸ்வா் - சிவகாமியம்மன் கோயிலில் திங்கல் கிழமை விமான கோபுரத்திற்கு பால ஸ்தாபன பூஜை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

தேனி மாவட்டம் சின்னமனூா் அருள்மிகு பூலாநந்தீஸ்வா் - சிவகாமியம்மன் கோயிலில் திங்கல் கிழமை விமான கோபுரத்திற்கு பால ஸ்தாபன பூஜை நடைபெற்றது. சின்னமனூா் அருள்மிகு பூலாநந்தீஸ்வா் - சிவகாமியம்மன் கோயிலில் விரைவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு கோயிலில் புனரமைப்பு உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற இருக்கிறது.

இதற்காக, கோயிலுள்ள சுவாமி விமானம், தண்டபாணி விமானம், ராஜகோபுரம், விநாயகா் விமானம், சாலக் கோபுரம், ஸ்வாமி நந்தி விமானம், சண்டிகேஸ்வரா் விமானம், அம்பாள் ஆகிய விமானங்களில் பால ஸ்தாபன பூஜை செய்யப்பட்டது. பூஜையில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.