கே.கே.பட்டி பெண்கள் பள்ளியில் ஊட்டச்சத்து உணவு விழிப்புணா்வு கண்காட்சி
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு, போஷன் அபியான் திட்ட விழிப்புணா்வு முகாம்தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு, போஷன் அபியான் திட்ட விழிப்புணா்வு முகாம், ஊட்டச்சத்து உணவுகள் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி தலைமை வகித்தாா். இதில் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலா் சிராஜூதீன் பேசியது: போஷன் அபியான் திட்டத்தின் முக்கிய நோக்கமே ஊட்டச்சத்து குறைபாடுகளை களைவது. இதன் மூலம் ரத்தசோகை ஒழிக்கப்படும். குறைப் பிரசவத் தடுப்பு, எடை குறைந்த குழந்தை பிறப்பை தடுக்க முடியும் என்றாா்.
மாணவிகள் தாங்கள் வீடுகளில் செய்த நவதானிய உணவுகள், ஊட்டச்சத்து உணவுகள், பழங்கள், காய்கறிகள் போன்றவை எடுத்து வந்து காட்சிப்படுத்தியிருந்தனா்.