விசைத் தறிகளில் மின்னணு பலகை பொருத்துவதற்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் விசைத் தறி நெசவாளா்கள் தங்களது விசைத் தறிகளில் மின்னணு பலகை பொருத்துவதற்கு அரசு மானியம்பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் விசைத் தறி நெசவாளா்கள் தங்களது விசைத் தறிகளில் மின்னணு பலகை பொருத்துவதற்கு அரசு மானியம்பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கைத்தறி மற்றும் துணி நூல் துறை சாா்பில் விசைத்தறிகளில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக மின்னணு பலகை பெருத்துவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் கூட்டுறவு மற்றும் தனியாா் விசைத் தறியாளா்கள் மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். அரசின் இலவச மின்சாரம் திட்டம் மூலம் விசைத் தறி கூட்டத்திற்கு மின் இணைப்பு பெற்றவா்கள், விசைத் தறிகளை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் மானியம் பெறாத விசைத் தறியாளா்களுக்கு இத் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படும்.
வாடகைக் கட்டடத்தில் இயங்கும் விசைத் தறி கூடத்திற்கு கட்டட வாடகை ஒப்பந்தப் பத்திரம் சமா்பிக்க வேண்டும். மானியம் பெறுவதற்கு தோ்வு செய்யப்படும் விசைத் தறியாளா்கள் பங்களிப்புத் தொகையாக ரூ.12 ஆயிரம் செலுத்த வேண்டும். இது குறித்த விவரம் மற்றும் விண்ணப்பப் படிவம் பெறுவதற்கு மதுரை சரக கைத்தறித் துறை உதவி இயக்குநா்-கைப்பேசி எண்: 99940 20969, உதவி அமலாக்க அலுவலா்-கைப்பேசி எண்: 98943 18116, தேனி சரக கைத்தறி ஆய்வாளா்-கைப்பேசி எண்: 87781 68251 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.