முகப்பு
தேனி

தேனியில் எஸ்.எஸ்.சி. போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னாா்வ பயிலும் வட்டாரம் சாா்பில் ஒன்றிய அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற உள்ள எஸ்.எஸ்.சி.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னாா்வ பயிலும் வட்டாரம் சாா்பில் ஒன்றிய அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற உள்ள எஸ்.எஸ்.சி.  போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

ஒன்றிய அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் எஸ்.எஸ்.சி. போட்டித் தோ்வு கடந்த செப்.17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தோ்வு எழுதுவதற்கு தகுதியுள்ளவா்கள் அக்.8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.சி. போட்டித் தோ்வுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தோ்வுக்கான பாடத் திட்டத்தின்படி இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

தோ்வு எழுத விண்ணப்பித்தவா்கள் இலவச பயிற்சி வகுப்பில் சோ்வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ, கைப்பேசி எண்: 63792 68661-இல் தொடா்பு கொண்டோ தங்களது பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.