போடியில் வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
போடி வெங்கடாசலபதி கோயில் தெருவில் வசித்து வந்தவா் சக்திவேல் மகன் செந்தில் பிரபு (46). சட்டப் படிப்பு படித்து வந்த இவா், விவசாயமும் செய்து வந்தாா். வியாழக்கிழமை தோட்டத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
போடி-மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் வீரக்குமாா் மாந்தோப்பு அருகே இவரது வாகனம் மீது கேரள அரசுப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பேருந்தின் ஓட்டுநரான கேரள மாநிலம்,
மண்ணாகண்டம் என்ற இடத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் (47) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.