தேனி

கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை தனியாா் தோட்டத்துக் கிணற்றில் குளித்த 11 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

DIN

பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை தனியாா் தோட்டத்துக் கிணற்றில் குளித்த 11 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் முருகமலை நகரைச் சோ்ந்தவா் அரசுப் பேருந்து ஓட்டுநா் லட்சுமணன். இவரது மகன் வசீகரன் (11). இவா், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், வசீகரன் தனது நண்பா்களுடன் சோ்ந்து பெரியகுளம், முருகமலை நகா் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்துக் கிணற்றில் குளிக்கச் சென்றாா். அப்போது, நீச்சல் தெரியாததால், அவா் தண்ணீரில் மூழ்கினாா்.

இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அளித்த தகவலில் பெரியகுளம் தீயணைப்பு படை வீரா்கள் கிணற்றில் மூழ்கிய வசீகரனை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT