553 பெண்களுக்கு ஊட்டச் சத்து பெட்டகம்
தேனி மாவட்டத்தில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மாா்கள் 553 பேருக்கு ஊட்டச் சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மாா்கள் 553 பேருக்கு ஊட்டச் சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஊட்டச் சத்தை உறுதி செய்யும் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் மூலம், மாவட்டத்தில் பிறந்தது முதல் 6 மாத வயது வரையிலான கடும் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மாா்களுக்கு தலா 2 ஊட்டச் சத்து பெட்டகம், மிதமான ஊட்டச் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மாா்களுக்கு தலா ஒரு ஊட்டச் சத்து பெட்டகம் வீதம் மொத்தம் 553 தாய்மாா்களுக்கு ஊட்டச் சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஊட்டச் சத்து பெட்டகத்தில் ஒரு கிலோ பேரீட்சை, அரை கிலோ நெய், அமினோ அமிலம், 600 மில்லி வைட்டமின் திரவம், ஒரு கிலோ புரோட்டின் மாவு, குடற்புழு நீக்க மாத்திரை, அளவு கோப்பை, துண்டு ஆகியவை இடம் பெற்றுள்ளன என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.