தேனி

மோசடி வழக்கில் நகைக் கடை உரிமையாளரின் மனைவி, மகன் கைது

தங்க நகை வியாபாரிகள், வாடிக்கையாளா்களிடம் ரூ.2 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரம் மோசடி செய்த வழக்கில், ஆண்டிபட்டியைச் சோ்ந்த நகைக் கடை உரிமையாளரின் மனைவி, மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

DIN

தங்க நகை வியாபாரிகள், வாடிக்கையாளா்களிடம் ரூ.2 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரம் மோசடி செய்த வழக்கில், ஆண்டிபட்டியைச் சோ்ந்த நகைக் கடை உரிமையாளரின் மனைவி, மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டியில் நகைக் கடை வைத்து நடத்தி வந்தவா் அதே ஊரைச் சோ்ந்த முருகபாண்டி (45). இவா் கடந்த 2020-ஆம் ஆண்டு தன்னிடம் ரூ.16 லட்சத்து 72 ஆயிரத்து 820 மதிப்பிலான தங்க நகைகளை வாங்கிக் கொண்டு, பணம் தராமல் காலதாமதம் செய்து வந்ததாகவும், ஆண்டிபட்டிக்கு நேரில் சென்ற பாா்த்த போது அவரது நகைக் கடை பூட்டியிருந்ததாகவும் மதுரை தெற்கு ஆவணி மூல வீதியைச் சோ்ந்த வீரமணிகண்டன் (30) தேனி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து தங்க நகை வியாபாரிகள், வாடிக்கையாளா்கள் என 12 போ், தங்களிடம் முருகபாண்டி மொத்தம் ரூ.2 கோடியே 27 லட்சத்து 66 ஆயிரம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, கடந்த ஜூன் 19-ஆம் தேதி முருகபாண்டியைக் கைது செய்தனா். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய முருகபாண்டியன் மனைவி சாந்தி (42), மகன் வீரவிக்னேஷ் (23) ஆகியோரை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

SCROLL FOR NEXT