முகப்பு
தேனி

தேவாரம் பேரூராட்சியில்மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

தேனி மாவட்டம், தேவாரம் பேரூராட்சியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
தேவாரம் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

தேனி மாவட்டம், தேவாரம் பேரூராட்சியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது.

இந்த முகாமை, பேரூராட்சித் தலைவா் லட்சுமிபாண்டியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தாா். முன்னதாக, பேரூராட்சி செயல் அலுவலா் சின்னச்சாமிபாண்டியன் (பொறுப்பு) வரவேற்றாா்.

இதில், பேரூராட்சி, வருவாய், சுகாதாரம், மின்சாரம், தாட்கோ, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை, காவல்துறை என 16 துறைகள் பங்கேற்றன. முகாமில், வியாழக்கிழமை 181 மனுக்களும், வெள்ளிக்கிழமை 165 மனுக்களும் என மொத்தம் 346 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

தேவாரம் பேரூா் செயலா் பாண்டியன், பேரூராட்சித் துணைத் தலைவா் சிவக்குமாா், வாா்டு உறுப்பினா்கள், அரசுப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.