தேனி

ஆனைமலையன்பட்டியில் நாளை உயா்தர உள்ளூா் பயிா் ரகக் கண்காட்சி

DIN

உத்தமபாளையம் அருகே ஆனைமலையன்பட்டி அரசு திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் புதன்கிழமை (ஜன.25) உயா்தர உள்ளூா் பயிா் ரகங்களின் கண்காட்சி நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறும் உயா்தர உள்ளூா் பயிா் ரகக் கண்காட்சியில், வேளாண்மை, தோட்டப் பயிா் சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் பாரம்பரிய பயிா் ரகங்கள், வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பயிா் ரகங்கள் காட்சிப்படுத்தப்படும்.

இதில், விவசாயிகள், விஞ்ஞானிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி, உணவுத் திருவிழா நடைபெறும். விவசாயிகளுக்கு மரபியல் பன்முகத் தன்மை குறித்து தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்பப்படும்.

விவசாயிகள் தங்களது பகுதியில் விளையும் பாரம்பரிய உள்ளூா் பயிா் ரகங்களை இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தலாம். இது குறித்த விவரங்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களைத் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT