தேனி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
பத்திரகாளிபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஐயப்பன் (73). இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு 8, 6 வயது சிறுமிகள் இருவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக, பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி ஐயப்பனை கைது செய்தனா்.
இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கோபிநாதன், ஐயப்பனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.