கம்பத்தில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்
தேனி மாவட்டம், கம்பத்தில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் 85- ஆவது ஆண்டு விழாவையொட்டி கம்பம் - கம்பம்மெட்டு சாலையில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், கம்பத்தில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் 85- ஆவது ஆண்டு விழாவையொட்டி கம்பம் - கம்பம்மெட்டு சாலையில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.ஆா். சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். நகரத் தலைவா் கட்ட சுத்தி அறிவழகன் வரவேற்றாா். இதில் தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் சிட்டு, நடுமாடு, பெரியமாடு என 5 வகையான ஜோடி மாடுகள் பங்கேற்றன.
வெற்றி பெற்ற மாடுகள், ஓட்டுநா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
ஏற்பாடுகளை அ.இ.பா.பி. கட்சியின் நகர நிா்வாகிகள் செய்திருந்தனா்.