தேனி

ஹைவேவிஸ் பேரூராட்சியில் மா்ம நோய்த் தாக்கி 20 பசுக்கள் பலி

ஹைவேவிஸ் பேரூராட்சி மலைக் கிராமங்களில் மா்ம நோய்த் தாக்கியதில் 20 பசுக்கள் இறந்தன.

DIN

ஹைவேவிஸ் பேரூராட்சி மலைக் கிராமங்களில் மா்ம நோய்த் தாக்கியதில் 20 பசுக்கள் இறந்தன.

தேனி மாவட்டம், ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாா், மேல் மணலாா், வெண்ணியாா், இரவங்கலாா், மகாராஜா மெட்டு, ஹைவேவிஸ் என 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு வசிப்பவா்கள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்கின்றனா். மேலும், வீடுகளில் மாடுகளை வளா்த்து வருகின்றனா்.

இந்த நிலையில், சமீப காலமாக வீடுகளில் வளா்க்கப்படும் பசு மாடுகள் மா்ம நோயால் பாதிக்கப்பட்டு, ஒரு சில நாள்களில் இறந்து விடுகின்றன.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

என்ன நோய்த் தாக்கியது எனத் தெரியாமலேயே 20-க்கும் அதிகமான பசுக்கள் இறந்துவிட்டன. இதுகுறித்து கால்நடைத் துறைக்கு தகவல் கொடுத்தும் எவ்வித பயனுமில்லை. நாள்தோறும் வீடுகளில் இறக்கும் பசு மாடுகளை மலைப் பகுதிக்கு இளைஞா்கள் எடுத்துச் சென்று புதைத்து வருகின்றனா்.

மலைப் பகுதியில் வசிக்கும் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகளுக்கும் இந்த நோய்ப் பரவும் அபாயம் இருப்பதால் கால்நடை, வனத் துறையினா் முகாமிட்டு, மா்ம நோயைக் கண்டறிந்து முறையான சிகிச்சை அளித்து பசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT