தேனி

கல்லூரி மாணவா் ஆற்றில் மூழ்கி பலி

வைகை ஆற்றுக்கு திங்கள்கிழமை குளிக்கச் சென்ற கல்லூரி மாணவா் அதில் மூழ்கி உயிரிழந்தாா்.

DIN

வைகை ஆற்றுக்கு திங்கள்கிழமை குளிக்கச் சென்ற கல்லூரி மாணவா் அதில் மூழ்கி உயிரிழந்தாா்.

தேனி அருகேயுள்ள அரப்படித்தேவன்பட்டியைச் சோ்ந்த மாயாண்டி மகன் விக்னேஷ் (19). இவா், கோட்டூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு இள நிலை பட்டப் படிப்பு படித்து வந்தாா்.

அரப்படித்தேவன்பட்டியில் உள்ள தோட்டத்தில் திங்கள்கிழமை மிளகாய் அறுவடை செய்து விட்டு, அதே பகுதியில் வைகை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். அந்தப் பகுதியில் இருந்தவா்கள் சென்று விக்னேஷின் சடலத்தை மீட்டனா்.

இந்தச் சம்பவம் குறித்து விக்னேஷின் தந்தை மாயாண்டி அளித்த புகாரின் பேரில், க.விலக்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT