முகப்பு
தேனி

பள்ளி வாகனங்கள் ஆய்வு

தேனி, உத்தமபாளையம் ஆகிய இடங்களில் வட்டார போக்குவரத்துத் துறை, காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பள்ளி வாகனங்கள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:00 PM
26tni_bus_2505chn_65_2
பகிர்:

தேனி, உத்தமபாளையம் ஆகிய இடங்களில் வட்டார போக்குவரத்துத் துறை, காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பள்ளி வாகனங்கள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

தேனி காவல் துறை ஆயுதப்படை மைதானம், உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகிய இடங்களில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. வாகனங்களின் நிறம், ஒளிரும்பட்டைகள், பிரேக், அவசர வழி, படிக்கட்டுகள், இருக்கைகள், ஜன்னல், மேற்கூரை, தரைப் பலகை, இயக்கத் திறன், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, முதலுதவிப் பெட்டி, தீயணைக்கும் கருவி உள்ளிட்டவை குறித்து மொத்தம் 710 வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

தேனி ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோா் பாா்வையிட்டனா்.

மேலும், பள்ளி வாகன ஓட்டுநா், நடத்துநா்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து விதிகள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஓட்டுநா், நடத்துநா்களுக்கு தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் பதிவு முகாம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.