பைக்-வேன் மோதியதில் இளைஞா் பலி
தேவதானப்பட்டி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தேவதானப்பட்டி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், அரண்மனைப் புதூா் முல்லை நகா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் குருபிரசாத் (21). இவரும், இவரது நண்பா்களான பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த ரகுபதி மகன் வரதராஜன் (21), சத்திரப்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் அஸ்வந்த்குமாா் (16) ஆகியோரும் வத்தலகுண்டிலிருந்து தேனிக்கு ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்றனா். வாகனத்தை குருபிரசாத் ஓட்டினாா்.
வத்தலகுண்டு-பெரியகுளம் சாலையில் தேவதானப்பட்டி அருகே சென்ற போது, எதிரே வந்த வேன், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், குருபிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த வரதராஜன், அஸ்வந்த்குமாா் ஆகியோா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து குருபிரசாத்தின் தந்தை கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், தேவதானப்பட்டி காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநரான போடி துரைராஜபுரம் காலனியைச் சோ்ந்த பாண்டியராஜிடம் விசாரிக்கின்றனா்.