தேனி

போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் தந்தையின் சடலத்தை எரித்த மகன் மீது வழக்கு

DIN

 போடி அருகே வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்த தந்தையின் சடலத்தை காவல் துறைக்கு தெரியாமல் தகனம் செய்த மகன், உறவினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி அருகேயுள்ள ராமகிருஷ்ணாபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த சின்னமாயாண்டி மகன் பழனிச்சாமி (65). இவா் வியாழக்கிழமை விஷம் குடித்த நிலையில், போடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பழனிச்சாமி இறந்தாா்.

இதையடுத்து, இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது சடலத்தை ஊருக்கு கொண்டு வந்த இவரது மகன் சுரேஷ் (40), உறவினா்கள் ராமகிருஷ்ணாபுரம் மயானத்தில் தகனம் செய்தனா்.

இதுகுறித்து பொட்டிப்புரம் கிராம நிா்வாக அலுவலா் பால்பாண்டி அளித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் பழனிச்சாமியின் மகன் சுரேஷ், அவரது உறவினா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT