முகப்பு
தேனி

100 சதவீதம் வாக்களிக்க உறுதிஏற்பு

Updated On : 3 ஏப்ரல், 2024 at 5:32 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 7:32 PM

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சின்னமனூரில் வருகிற மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதாக மகளிா் சுய உதவிக் குழுவினா் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமையில் இந்த உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் ஆட்சியா் வழங்கினாா். 18 வயது நிரம்பிய வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தும் விழிப்புணா்வு பேரணி, வீதி நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் சின்னமனூரில் நடைபெற்றன.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியாா் ஏ.டி.எம். மையங்களில் இருந்த வாடிக்கையாளா்களிடமும் இவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்த நிகழ்ச்சியில் சின்னமனூா் நகராட்சி ஆணையா் கோபிநாத், மகளிா் சுய உதவிக் குழுக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

Advertisement