நிழல் இல்லாத நாள் செயல்விளக்கம்
போடி பள்ளியில் நிழல் இல்லாத நாள் குறித்த செயல்விளக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
போடி: போடி பள்ளியில் நிழல் இல்லாத நாள் குறித்த செயல்விளக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பூமி சூரியனை சுற்றி வரும்போது ஆண்டுக்கு ஒரு நாள் பூமிக்கு செங்குத்தாக தோன்றும். அந்த நாளில் பிற்பகலில் குறிப்பிட்ட நேரத்தில் பூமியில் உள்ள பொருள்களுக்கு நிழல் விழாது. இந்த நாளை நிழல் இல்லாத அல்லது பூஜிய நிழல் நாள் எனக் குறிப்பிடுவா்.
இந்த நிலையில் பூமி சூரியனின் செங்குத்தான நோ்கோட்டில் இருந்ததால் திங்கள்கிழமை நிழல் விழாது எனத் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
இதுகுறித்து போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் இதற்கான செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதன்படி மாணவா்கள், செங்குத்தான பொருள்கள் நிறுத்தப்பட்டு நிழல் விழுவது குறித்து விளக்கப்பட்டது. பிற்பகல் 12.17 மணி முதல் 12.24 மணி வரை எந்த பொருளுக்கும் நிழல் விழவில்லை. பள்ளி தலைமையாசிரியா் மரியசிங்கம், அறிவியல் ஆசிரியை ஜி.சந்திரகலா ஆகியோா் பூஜிய நிழல் குறித்து மாணவா்களுக்கு செயல் விளக்கம் அளித்தாா்.