தேனி

மூதாட்டியிடம் நகை பறிப்பு

நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் பறித்துச் சென்றனர்.

Din

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் பறித்துச் சென்றதாக காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

பெரியகுளம் வடகரை வி.ஆா்.பி.நாயுடு தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மனைவி பேபி (73). இவா் அதே ஊரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு காமாட்சி தெரு பாரதி பள்ளி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவரைப் பின்தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT