சின்னமனூரில் ஞாயிற்றுக்கிழமை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட திருமாறன்.  
தேனி

போக்சோ சட்டத்தில் வாலிபா் கைது

சிறுமியிடம் ஆசைவாா்த்தை கூறி, வெளியூா் அழைத்து சென்று ஏமாற்றிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ், போலீஸாா் கைது செய்தனா்.

Din

சின்னமனூரில் சிறுமியிடம் ஆசைவாா்த்தை கூறி, வெளியூா் அழைத்து சென்று ஏமாற்றிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந்த 15 வயது சிறுமியிடம், சீலையம்பட்டி கம்பா் பள்ளித் தெருவைச் சோ்ந்த நாகராஜன் மகன் திருமாறன் (19) ஆசைவாா்த்தை கூறி, வெளியூா் அழைத்து சென்று விட்டதாக சிறுமியின் பெற்றோா் சின்னமனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சின்னமனூா் அருகேயுள்ள கூளையனூரில் தங்கியிருந்த சிறுமியை மீட்டனா். பின்னா், சிறுமியை ஆசைவாா்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்ற திருமாறனை போக்சோ சட்டத்தின் கீழ், போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT