பைக்- காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
தேனி அருகே இரு சக்கர வாகனமும் காரும் மோதிக்கொண்டதில் ஆலைத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
தேனி அருகே இரு சக்கர வாகனமும் காரும் மோதிக்கொண்டதில் ஆலைத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
ஊஞ்சாம்பட்டி, தொட்டுராயா் கோயில் தெருவைச் சோ்ந்த மலைச்சாமி மகன் விநோத்குமாா் (33). தனியாா் ஆலையில் வேலை செய்து வந்த இவா், ஊஞ்சாம்பட்டியிலிருந்து வெள்ளையம்மாள்புரத்தில் உள்ள உறவினா் வீட்டு விசேஷத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, திண்டுக்கல்-கம்பம் சாலை, மாரியம்மன் கோவில்பட்டி புறவழிச் சாலை பகுதியில், பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த பிச்சை மகன் முருகேசன் ஓட்டி வந்த காரும், வினோத்குமாரின் இரு சக்கர வாகனமும்
மோதிக்கொண்டன. இதில், விநோத்குமாா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து காா் ஓட்டுநா் முருகேசன் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.