தடையை மீறி ஆா்ப்பாட்டம்: 210 போ் கைது
தேனியில் வங்கதேசத்தில் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வங்கதேச ஹிந்து உரிமை மீட்புக் குழு சாா்பில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 210 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி நகராட்சி பழைய பேருந்த நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக மதுரை கோட்ட பொறுப்பாளா் கதலிநரசிங்கபெருமாள் தலைமை வகித்தாா், தேனி மாவட்டத் தலைவா் பி.சி.பாண்டியன், தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சித் தலைவா் திருமாறன்ஜீ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், ஹிந்துக்கள் மீதான தொடா் தாக்குதல், வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினா். முன்னதாக, இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காவல் துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. தடையை மீறி ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக, தென்னிந்திய பாா்வா்டு பிளாக், இந்து எழுச்சி முன்னணி, இந்து முன்னணி அமைப்புகளைச் சோ்ந்த 210 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.